நாளாந்தம் சுமார் 1,000 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவு?

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நாளாந்தம் சுமார் 1,000 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின்மையே சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரிப்புக்குக் காரணம் என, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.