பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது: பிரசன்ன!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதை விட வேறு மாற்று வழி தமக்குத் தெரியவில்லை என்றும் அமைச்சர் அதில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

அந்த வகையில் மனசாட்சிக்கு நேர்மையாக தாம் சிந்தித்து ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக செயப்படுவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தாம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என்றும், தமது முன்னுதாரணமான மானசீகத்  தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் சிறந்த உடல் நலத்துடன் வாழ்வதற்காக பிரார்த்திப்பதாகவும்  அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Posts