மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த இலங்கை அணி தற்போது சர்வேதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது

50 ஓவர் கிரிக்கெட் ஆனாலும் சரி, டி20 ஆனாலும் சரி அல்லது டெஸ்ட் போட்டிகளிலும் கூட அசைக்க முடியாத அணியாக ஒரு சமயம் இலங்கை அணி வளம் வந்தது.

சர்வேதச டி20 போட்டிகளில் அதிகமான தோல்விகளை பதிவு செய்த அணியாக தற்போது இலங்கை அணி மாறியுள்ளது. இதில் சூப்பர் ஓவர் உட்பட அதிக தோல்விகளை இலங்கை பெற்றுள்ளது.

பல்லேகலையில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகமான தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை மாறியுள்ளது.

அதன்படி, இலங்கை அணி இதுவரையில் இருபதுக்கு 20 போட்டிகளில் 105 முறை தோல்வியடைந்துள்ளதாக கிரிக்கெட் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணிக்கு அடுத்தபடியாக இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக 104 தோல்விகளுடன் பங்களாதேஷ் அணி உள்ளது.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 101 தோல்விகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 99 தோல்விகளுடன் சிம்பாப்வே அணியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வேதச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் :

இலங்கை – 105 தோல்விகள்
வங்கதேசம் – 104 தோல்விகள்
வெஸ்ட் இண்டீஸ் – 101 தோல்விகள்
ஜிம்பாப்வே – 99 தோல்விகள்
நியூஸிலாந்து – 99 தோல்விகள்