கேரள மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் பலி

முக்கிய செய்திகள் 3

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டு 200இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரு இலங்கையர்கள் அடங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Trending Posts