
கிளப் வசந்தவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுமான கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் லொக்கு பெடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவர் பெலாரஸில் வைத்தும் லொக்கு பெடி என்பவர் துபாயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் லொக்கு பெடி ஆகியோரின் தலைமையில் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவரின் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
பிரான்ஸில் தலைமறைவாகியிருந்த கஞ்சிப்பானை இம்ரான் பெலாருஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளப் வசந்தவின் கொலை சம்பவத்துக்காக கஞ்சிப்பானை இம்ரான் கோடி ரூபா அளவில் செலவழித்துள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.