உனவடுன, தலவெல்ல பிரதேசத்தில் ஒருவர் இன்று (01) அதிகாலை அவரது மைத்துனரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவெல்ல பகுதியைச் சேர்ந்த கனேகொட கமகே ரத்னசிறி என்ற 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், சந்தேக நபர் தூங்கிக் கொண்டிருந்த மைத்துனரை தலையில் அடித்துக் கொன்றுவிட்டு பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.