புதையல் தோண்டிய எட்டு பேர் கைது

முக்கிய செய்திகள் 1

அனுராதபுரம் விஜேபுர மற்றும் தௌபுகஸ் ஏரி பகுதிகளில் புதையல் தோண்டிய 8 சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டதாக கலேன் பிதுனு வேவ மற்றும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் பயாகல, கலேன் பிதுனு வேவ, பேருவளை, சீனன் கோட்டை, அனுராதபுரம், அம்பலாந்தோட்டை மற்றும் திக்வெல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts