தலாத்துஓயாவில் மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி

முக்கிய செய்திகள் 3

கண்டி, தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (31) காலை மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, தலாத்துஓயா பகுதியில் வசிக்கும் 79 வயதுடைய வயோதிபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது அயல் வீட்டாளருடன் இணைந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக தனது வீட்டிற்கு அருகில் மின்சார கம்பிகளைப் பொருத்தியுள்ளார்.

பின்னர், உயிரிழந்தவர் மின்சார கம்பிகளில் மிருகங்கள் ஏதேனும் சிக்கியுள்ளதா என பார்ப்பதற்காக தனது வீட்டிற்கு அருகில் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்தவரது 63 வயதுடைய அயல் வீட்டாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts