புங்குடுதீவில் அட்டைப் பண்ணை: ஏதுனிலை குறித்த நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ், புங்குடுதீவு பிரதேசத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளது கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர்
செயற்படுத்தலில் காணப்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்து பண்ணைகளை அமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுனிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts