
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிர்ச்சினைகளை கையாளுதல் மற்றும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடற்றொழிலாளர் சமூகத்தின் நிலைப்பாடு மற்றும், சீன அரசாங்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கியுள்ள 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலை, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் போன்றவற்றை சரியான முறையில் கடற்றொழிலை ஜுவனோபாயமாக கொண்ட கற்றொழிலாளர்களுக்கு பகிர்நதளித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன