பிலிப்பைன்ஸ் தலைநகரிலுள்ள வணிக வளாக கட்டிடத்தில் தீ – 11 பலி!

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சீனா டவுன் மாவட்டத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் பற்றிய தீ கட்டிடத்தின் மேல் பகுதி வரை பரவியது.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைந்தனர். ஆனாலும், இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.