இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

முக்கிய செய்திகள் 1

அனுராதபுரம் மல்வத்து ஓயா புதிய பாலத்திற்கு அருகில் இன்று (03) இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்ஹ ​​தூணுக்கு அருகில் புதிய மல்வத்து பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.