நுவரெலியாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு – சந்தேக நபரொருவர் கைது

முக்கிய செய்திகள் 1

நுவரெலியா,நோர்வுட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வுட் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா,நோர்வுட் பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.