மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார்.
மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.
அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது