யாழில் சர்வமதத் தலைவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வமத தலைவர்களையும் சந்தித்து ஆசிப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களை சந்தித்து ஆசிப்பெற்றுக் கொண்டதோடு யாழ்.ஆயாின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்று அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் யாழ். நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யாழ். ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துபர சிறிவிமல நாயக்க தேரரை சந்தித்து நலன் விசாாித்தார்.

மேலும், "பௌத்த இந்து சமய மன்றம்" சார்பில் அதன் தலைவர் கலாநிதி எம். மோகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.