திங்களன்று கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

முக்கிய செய்திகள் 2

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை (05) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அக்காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (03) முதல் கங்காராம விகாரைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களும் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் ஜினரதன மாவத்தை சந்தியில் இருந்து பிரவேசிக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.