எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தனக்கு சவாலாக இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு இடையில் மாறினாலும் அது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளின் எண்ணிக்கையை பாதிக்காது.
அதேவேளை, தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 25 பேருக்கும் குறைவானவர்களே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யக்கூடிய தகுதியுடையவர்கள் எனவும் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.