எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தேவைக்கு அப்பாற்பட்ட விடயம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தற்போது 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து, தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து எடுப்பது என்பது எந்தவிதத்திலும் பிரயோசனமற்ற விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.