ஹப்புத்தளையில் வீதியை விட்டு விலகிய லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.   

இந்த லொறி நுவரெலியா வெலிமடை ஹப்புத்தளை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த போது ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான லொறியில் சாரதியும் மற்றுமொருவரும் மாத்திரமே இருந்ததாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.