ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்டக் குழு ரணிலுக்கு ஆதரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட சபைக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட இணைப்பு அமைப்புகளின் தலைவர்கள் இந்த பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Trending Posts