உடனடியாக லெபனானிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தல்!

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் அங்குள்ள தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.

அதன்படி, பிரித்தானியா, சுவீடன், பிரான்ஸ், கனடா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு எதிராக 'கடுமையான' பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.