2வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு- இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

இந்நிலையில், இலங்கை-இந்திய் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். வெலாலகே 39 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக ஆடியது.

முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார், சுப்மன் கில் 35 ரன்னில் வெளியேறினார். அக்சர் படேல் ஓரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கையின் வாண்டர்சே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.