பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

முக்கிய செய்திகள் 3

பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் வசித்தவரும் நிலையில் இலங்கை சமூகமும் பாதுகாப்பாக இருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் தற்போது ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.