மாத்தறை சிறையில் தடை செய்யப்பட்ட பல பொருட்கள் மீட்பு!

முக்கிய செய்திகள் 2

மாத்தறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தடைசெய்யப்பட்ட பல பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் மூன்று அறைகளில் 19 கையடக்கத் தொலைபேசிகள், 18 மின்கலங்கள், 09 சிம்அட்டைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 07 பொதிகள் என்பன மீட்க்கபபட்டுள்ளன.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.