திருகோணமலையில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

முக்கிய செய்திகள் 1

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கந்தளாய் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈச்சலம்பற்று பகுதியில் வசிக்கும் 45 மற்றும் 46 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.