வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

32 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்  போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். 

குருணாகல், வாரியப்பொல, கட்டுபொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய வர்த்தகரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (05) திங்கட்கிழமை காலை 09.25 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர், விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 21,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 108 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.