அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலாளர்களினால் காணித் தேவை மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் குறித்த தகவல்கள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பதிவுகளுக்காக முடிந்தளவு அரச காணிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அரச காணிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் தோட்ட நிறுவனங்களின் வசம் உள்ள தனியார் காணிகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.