கிளிநொச்சியிலும் சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திகள்

சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லையென வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் (இன்று) வடமாகாண ஆளுனரை சந்திக்கவுள்ளதாகவும், அவர் தமக்கு சுமூகமான பதிலை வழங்காத பட்சத்தில் தமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

தாம் 1992, 1997களில் இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணி புரிவதாகவும் தமக்கான நியமனங்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.