புத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படாது – ரவூப் ஹக்கீம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த சரத்தும் உத்தேச அரசியல் அமைப்பில் இல்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பில் புத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது என்ற காரணம் ஒன்றை மையப்படுத்தி புதிய அரசியல் அமைப்பொன்று தேவையில்லையென மகாநாயக்கர்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஏனைய தமிழ் கட்சிகளோ, புத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு சபையில் கருத்துக்கள் முன்வைக்கவில்லை. ஏனைய மத நடவடிக்கைகளுக்கு அசாதாரணம் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற பகுதியை மாத்திரம் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பில் அத்தகைய ஒரு விடயம் உள்வாங்கப்பட வேண்டுமென பரிந்துரைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரசியல் அமைப்புச் சபையினால் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.