மழை பெய்யும் சாத்தியம்

செய்திகள்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று இரவு மழை பொழிய கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இன்று இரவு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.