இலங்கை அரசியலில் புதிய திசையை நோக்கி புதிய அரசியல் கூட்டணி

முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருந்தொகையான பிரதிநிதிகளின் பங்கேற்புடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் இலங்கை அரசியலில் புதிய திசையை நோக்கிய பரந்த புதிய அரசியல் கூட்டணியின் அறிமுகம் நாளை (05) இடம்பெறவுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த கூட்டணி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் நடுநிலை அரசியல் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளின் பங்கேற்பினால் உருவாக்கப்பட்ட பரந்த கூட்டமைப்பு நாளை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்,.

Trending Posts