12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் – மூவர் கைது!

முக்கிய செய்திகள் 3

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் மற்றும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இலங்கையை சேர்ந்த மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களது கொண்டுவந்த பெட்டியில் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்டின் எடை 3.23 கிலோ என பெங்களூரு சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த மூவரும் போதைப்பொருள் உட்கொண்டு, ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.