திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று புதன்கிழமை (04) தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வாடகைக்காக வசித்து வந்த நிலையில் பல இலட்சக் கணக்கு பெறுமதியான உபகரணங்கள் எரித்து சாம்பலாகியதாக வீட்டில் குடியிருந்த பிரதான குடியிருப்பாளர் தெரிவித்தார். மின் ஒழுக்கு ஏற்பட்டதால் தீச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் வாடகை வீட்டில் இருந்த நபர்களின் உபகரணங்களே தீப்பற்றி நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு மீரா நகர் கிராம சேவையாளர் சென்று களநிலவரங்களை அறிந்து கொண்டார்.
இச் சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவுமில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.