ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.