ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். , அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.