அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் உடல் கருகி பலி

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் [Arkansas] உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. இதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

அந்த கார் மீது பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 4 பேரால் வெளியே வரமுடிய வில்லை. அவர்கள் காருக் குள்ளே கருகி பலியானார்கள். உடல்கள் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில்இவர்கள் 4 பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றபோது விபத் தில் சிக்கினர்.

carpooling நிறுவன தரவுகளின் மூலமும் அவர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்ஷினி வாசுதேவன், ஆர்லிங்டனிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் பென்டன்வில்லில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்று கொண்டிருந்தார். ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டல்லாஸில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு நண்பர் ஷேக்குடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

லோகேஷ் பலச்சார்லா தனது மனைவியைச் சந்திப் பதற்காக பென்டன்வில் லுக்குச் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோர விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் முழுவதும் கருகி சாம்பலாகி உள்ளதால் மரபணு சோதனை மூலம் உடலை அடையாளம் காணும் பணி களை போலீசார் நடத்த உள்ளனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.