அஞ்சல் மூல வாக்களிப்பு: முதலாம் நாள் நிறைவு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் முதலாம் நாள் இன்று நிறைவடைந்துள்ளது. 
 
காலை 9 மணிக்கு ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 
 
இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு, எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ம் திகதிகள் வாக்களிப்பதற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, 7 இலட்சத்து 12,321 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளனர்.