தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 3

12 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் போதைப்பொருளுடன் இலங்கையர் மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கூடாக நாட்டை விட்டு வெளியேறிய இவர்கள் நேற்று (3) பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 
பெங்களூர் சுங்கத் துறையின் தகவலின்படி, அவர்களது பயணப்பொதியின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் 3.23 கிலோகிராம் எடை கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் அம்மூவரும் போதைப்பொருளை ஆசனவாயில் மறைத்துக் கடத்தியமை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சந்தேக நபர்களை பெங்களூரு காவல்துறையினரிடம் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக சுங்கத்திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.