வர்த்தகர் கொலைச்சம்பவம்: குற்றவாளிக்கு மரண தண்டனை!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைக் கடத்தி அவரை கொலை செய்துவிட்டுத் தங்கம் மற்றும் 38 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த மரண தண்டனை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இன்று பிறப்பித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி சின்னதுரை சுரேகா ராஜா என்ற தங்க ஆபரண வர்த்தகரை அவரது வாகனத்துடன் கடத்திச் சென்று புசல்லாவை பகுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.