10,000 ரூபா பணம் கேட்டு எழுபத்தாறு வயது பெண்ணின் காதணிகளை கொள்ளையடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனைமடு, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான வியாபாரத்தில் தொழிலாளியாக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் மாத்திரம் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த நபர் வீட்டுக்கு சென்று அவரிடம் பத்தாயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார். தருவதற்கு இவ்வளவு பெரிய தொகை இல்லை என்று கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொட்டாவ மாலம்பே வீதி இலக்கம் 720 இல் வசிக்கும் டொன லீலா அபேரத்ன என்ற (76) வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.