பச்சை குத்தும் நபர் 14 வயது சிறுமியை அழைத்து சென்ற சம்பவம்: பொலிஸார் விசாரணை!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தந்தையின் உடலில் பச்சை குத்துவதற்காக வந்த பச்சை குத்தும் நபர் 14 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

பேருவளை பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   

இதேவேளை,  சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 2ம் திகதி காணாமல்போன இந்த சிறுமி உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தன்னை மொரட்டுவையிலிருந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில்  பொலிஸார் மேற்கொண்ட  விசாரணையின் போது, மொரட்டுவை, உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தும் நபரின் வீட்டில் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்த சிறுமி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விடயம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை  பேருவளை  தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.