ஏதாவது ஒரு வகையில் தம்மை சிறையில் அடைப்பதற்கு அல்லது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதியொருவரை சந்தித்து தமக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு சன்மானமாக பல்வேறு வரப்பிரசாதங்களைக் குறித்த சந்தேக நபருக்கு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபரைச் சந்தித்தமைக்கான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் தான் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.