அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உரிய நிறுவன அதிகாரிகள் வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்களிக்கும் இடத்திற்கு செல்லும் தூரம் 40Km ஐ விடவும் குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும், 40Km – 100Km இற்கும் இடைப்பட்ட தூரம் எனின் ஒரு நாள் விடுமுறையும் 100Km – 150Km இற்கு இடைப்பட்ட தூரம் எனின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150Km இற்கு மேற்பட்ட தூரம் எனின் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.