யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடிப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாவடி தெற்கு பத்திரகாளி கோயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு வேளையில் உள் நுழைந்த மர்மநபர்கள், இளைஞர் மீது வாள்வெட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சுன்னாகம் குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.