வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக மாற்றியமைத்து தொடர்பில் கேள்வி!

முக்கிய செய்திகள் 2

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் அனைத்து வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக மாற்றியமைத்து சுகாதார செயலாளர் செப்டம்பரில் திடீரென சுற்றறிக்கை வெளியிட்டமை தேர்தல் லஞ்சம் இல்லையா என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் விசேட வைத்திய அதிகாரிகள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள், அரச பதிவு வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் மருத்துவ நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக உயர்த்தும் அரசியல் தீர்மானத்தை ஜூலை மாதம் எடுத்ததாகவும், ஆனால் அதற்கான சுற்றறிக்கையை வெளியிடாமல் சுகாதார அமைச்சகம் அலட்சியம் காட்டி வருவதாகவும், திடீரென கடந்த 02ம் தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.