நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி விளக்கம்

முக்கிய செய்திகள் 2

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளதுடன், கொள்கை வட்டி வீதத்தையும் குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய வங்கி சட்டம் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் வங்கி கட்டமைப்புக்கு பாரிய அனுகூலமாக அமைந்துள்ளதாகவும், மாற்று விகிதத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் ரூபாயை வலுப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.