நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது

முக்கிய செய்திகள் 1

நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் போதைப்பொருள் விற்ற பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீரவின் வழிகாட்டுதலில் பொலிஸ் குழுவினர்களால் கிராண்ட்பாஸில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தையைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்னே 0.5 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.