மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள எலஹெர – கிரித்தல சரணாலயத்தில் சுற்றித் திரிந்த யானை குட்டி ஒன்று வேட்டைக்காரன் ஒருவனால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக எலஹெர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 அடி உயரமுடைய 6 முதல் 8 வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி ஒன்றே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது.
மொரகஹகந்த - களுகங்கை வீதியில் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வீதிக்கு அருகாமையில் இந்த யானை குட்டி இறந்து கிடந்துள்ளது.
மேலும் ,யானைக்குட்டியின் தலையில் 8 தடவைகள் சுடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எலஹெர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.