இராஜினாமா செய்து சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுநர்!

முக்கிய செய்திகள் 2

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.