இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில், வருடத்திற்கு 15 கோடி ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்கள், அதில் 30 சதவீதத்தை வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரி செலுத்தும் நபர்களில் முதலிடத்தை ஹொலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
வருமான வரியாக அவர் வருடத்திற்கு 92 கோடி ரூபாய் செலுத்தி வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இவர் வருடமொன்றுக்கு 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகிறார்.
மூன்றாவது இடத்தில் உள்ள ஹொலிவுட் நடிகர் சல்மான்கான், வருமான வரியாக 75 கோடி ரூபாய் செலுத்துகிறார்.
நான்காவது இடத்தில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் 71 கோடி ரூபாவும், ஐந்தாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாவும் வருமான வரியாகச் செலுத்துகின்றனர்.
ஆறாவது இடத்தில் உள்ள ஹொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 42 கோடி ரூபாவும் ஏழாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 38 கோடி ரூபாவும் வருமான வரியாகச் செலுத்துகின்றனர்.
நடிகர் ரன்பீர் கபூர் 36 கோடி ரூபாவும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 28 கோடி ரூபாயும் வருமான வரியாகச் செலுத்துகின்றனர்.